வடமாகாணத்தை வடமாகாண மக்களுக்கு வானிலை எச்சரிக்கை…!நா.பிரதீபராஜா எச்சரிக்கை.. |

இந்த ஆண்டுக்கான வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், 6 சுற்றுக்களாக மழை பெய்யும், மேலும் இந்த மழையின் செறிவு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

எனவே வடமாகாணத்திற்கு குறுகியகால இடைவெளியில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்குமாக இருந்தால் வெள்ள பெருக்கு உருவாகும் வாய்ப்புக்களும் அதிகமாகவே காணப்படுகின்றது.

மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா எச்சரித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்து சமுத்திர பிராந்தியத்தில் இருந்து தென்மேற்கு பருவக்காற்று

கடந்த 19ம் திகதியுடன் விலகியுள்ளது. 20ம் திகதி தொடக்கம் காற்றின் நகர்வு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியதாகும். வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை இன்று தொடங்கும் என மாதிரிகள் காட்டுகின்றன.

இது எதிர்வரும் 27ம் திகதிவரை நீடிக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. பசுபிக் பிராந்தியத்தில் நிலவும்  லா நினோவின் நிலைமைகளும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் இரு முனையிலும் எதிர்மறையாக இருப்பதன் காரணமாக இந்த வருட வடகீழ் பருவபெயர்ச்சி மழையின் அளவு சாராசரியை விடவும் உயர்வாக இருக்கும்.  என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்து சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை எதிர்வுகூறலும் இதற்கு சாதகமான நன்மைகளை காட்டுகிறது.

இந்த ஆண்டு வடகீழ் பருவக்காற்று மழை 6 சுற்றுக்களில் மழையை பெய்விக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்த பருவ மழையின் 60 சதவீதமான பகுதி நவம்பர் 25ம் திகதி தொடக்கம்

டிசம்பர் 10ம் திகதிவரையான காலப்பகுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் வங்க கடலில் இவ்வாண்டு 5ற்கும் மேற்பட்ட தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

மேலும் அவற்றில் சில புயலாக மாறுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளது. எனவே எமக்குள்ள குறுகியகால இடைவெளியில் செறிவான மழைவீழ்ச்சி கிடைக்குமாகையால் வெள்ளப்பெருக்கு நிச்சயம் ஏற்படும்.

எனவே வெள்ள முற்பாதுகாப்ப நடவடிக்கைகள் அவசியம் என கூறியுள்ளா

Recommended For You

About the Author: Editor Elukainews