ரஷ்யா நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை: அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷ்யா நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். ஆனால், இந்த வாரம் நடக்கும் பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்கானில் தலிபான்கள் தலைமையிலான அரசை அங்கீகரிக்கக் கூடாது என்பதை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளில் விரைவில் நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்பாக மாஸ்கோவில் அக்டோபர் 20ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் சர்வதேசக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தலிபான்களுக்கும் ரஷ்யா அழைப்பு விடுக்கவுள்ளது.
ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, தனது ராணுவ பலத்தை அதிகரிக்க தஜிகிஸ்தானில் ரஷ்யா ராணுவப் பயிற்சிகளை நடத்தியதுடன், அங்குள்ள ராணுவத் தளத்தில் அதன் ஆயுதங்களையும் பலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இப்பேச்சுவார்த்தையை ரஷ்யா நடத்துகிறது. இப்பேச்சுவார்த்தையில் சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews