மட்டு வவுணதீவில் பூரண தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் கைது 12 போத்தல் மதுபானம் மீட்பு.

பூரண தினத்தில் சட்டவிரோதமாக இரு வீடுகளில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவரை 12 போத்தல் மதுபானங்களுடன் கைது செய்துள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

 

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை நெடுஞ்சேனை பிரதேசத்தில் வௌ;வேறு இரு வீடுகளை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். இதன் சட்டவிரோத அரச மதுபான விற்பனையில் ஈடுபட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவரை 7 போத்தல் கொண்ட 5250 மில்லி லீற்றர் மதுபானத்துடனும்.

43 வயது கொண்ட பெண் ஒருவரை 5 போத்தல் கொண்ட 3750 மில்லி லீற்றர் மதுபானத்துடன் கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Virus-free. www.avast.com

Recommended For You

About the Author: Editor Elukainews