மட்டக்களப்பு பறங்கியாமடு பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறங்கியாமடு புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தமது வழமையான வீதி போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை கண்டித்தும் போக்குவரத்திற்கு விடுமாறு கோரி பிரதேச மக்களினால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

புகையிரத கடவை பாதையில் ஒன்று கூடியவர்கள் கையில் சுலோகங்களை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பறங்கியாமடு மீனவர் கிராம மக்கள் தமது போக்குவரத்தினை வழமையான கடற்கரை வீதியினால் புகையிரத பாதையின் குறுக்காக கடந்து மேற்கொண்டு வந்திருந்தனர்.

கிரான்,சந்திவெளி,முறக்கொட்டான்சேனை,மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்தோர்கள், வியாயபாரிகள் என பலரும் தமது கடற்றொழில் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட இவ் வீதியினையே பயன்படுத்தி வருகின்றனர்.

இவ் பாதையானது கடற்கரைக்கு செல்வதற்கு குறுகிய தூரமாக காணப்பட்டதனால் போக்குவரத்திற்கு இலகுவாக காணப்பட்டது.தற்போது 5 கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews