கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்தது என்ன? – CCTV மூலம் வெளியான உண்மை.

இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கர் ஒருவர் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் பயணி ஒருவர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இலங்கைக்கு பயணித்து போக்குவரத்து வசதி மற்றும் ஹோட்டல் வசதி பெற்றுக் கொள்ள முடியாமை குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும் குறித்த நபர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில் இருந்த குற்றச்சாட்டை விமான சேவை நிறுவனம் நிராகரித்துள்ளது.  குறித்த பயணி தொடர்பில் CCTV காணொளியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் போலியானதென தெரியவந்துள்ளது.

ஜோர் என்ற அமெரிக்க பயணி கடந்த 6ஆம் திகதி இலங்கை வருவதாக குறிப்பிட்டு வாடகை வாகனத்திற்கு பதிவு செய்துள்ளார். எனினும் அவர் ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு இணையதளத்தில் இருந்து 6 ஆம் திகதி இலங்கை வாகன நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். எப்படியிருப்பினும் அவர் இலங்கைக்கு 7ஆம் திகதியே வருகை தந்துள்ளார். அவருக்கான வாகனம் 6ஆம் திகதியே விமான நிலையத்திற்கு வருகைத்துள்ளது. வாகனத்தின் சாரதி நீண்ட நேரம் காத்திருந்தார். எனினும் அவர் இலங்கை வரவில்லை என அறிந்த பின்னரே சாரதி அங்கிருந்து சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

திகதியை பிழையாக தெரிவு செய்து அமெரிக்கர் அதிருப்தி வெளியிட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews