அரசியல் எழுச்சிக்கு தயாராகும் மிகப் பெரிய கட்சி? – கொழும்பு ஊடகம் தகவல்.

அடுத்த அரசியல் எழுச்சியை ஒரு பெரிய அரசாங்கக் கட்சி வழிநடத்தும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் செயல்படுத்துவதற்கும் ஒரு பரந்த அரசியல் முகாமை உருவாக்குவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி அமைக்க இதுவரை சுமார் 12 கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக்குவதற்கு பாடுபட்ட 49 சிவில் சமூக அமைப்புகளில் 40 ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு மட்டுமல்ல, மக்கள் முன்னணிக்கும் அதிகாரம் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews