வல்லிபர ஆழ்வார் திருக்கோயில் பிரதம குரு இயற்கை எய்தினார்….!

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வரலாற்று  சிறப்பு மிக்க வல்லிபுர குறிச்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  பிரதம குரு கணபதிசாமிக்குருக்கள்  சுதர்சனக்குருக்கள்  அவர்கள் தனது 76 வது வயதில்  இன்று காலை 10:00. மணியளவில்  செவ்வாய்க்கிழமை  இயற்கை எய்தினார்.
இவர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு  மேலாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பிரதம குருவாக இறை பணியாற்றியுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மத்தி கரவெட்டியை பிறப்பிடமாகவும், சிவன் கோவிலடி, ஆவரங்காலை வதுவிடமாகவும் கொண்டவர் ஆவார்.
அன்னாரின் இழப்பு வல்லிபுர ஆழ்வார் பக்கத்ர்களிற்க்கும்,  வடமராட்சி மக்களிற்க்கும்  பேரிழப்பாகும்.
அன்னாரின் இறுதிக்கிரயைகள் அவரின் சொந்த இடமான சிவன் கோவிலடி, ஆவரங்காலில் நாளை காலை 9:00 மணியளவில் இடம் பெறவுள்ளது.
அவரது மூன்று பிள்ளைகளும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குருவானவர்களாக உள்ளமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews