சண்முகம் குகதாசன் சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

சண்முகம் குகதாசன் சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(09) காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் குகதாசன்  பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சண்முகம் குகதாசன் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 16,770 வாக்குகளை  பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews