மட்டக்களப்பு ஆலங்குளத்தில் தனிப்பட்ட ஒரு நபர் காணி பகரிப்பு..மக்கள் போராட்டம்.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஆலங்குள பிரதேசத்தில் காணிப் பிணக்கு தொடர்பான நேற்று  காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தங்களுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் கட்டுவதற்காக வழங்கப்பட்ட காணிக்குள் தனி நபர் ஒருவர் அத்துமீறி காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதனை தடுத்து நிறுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி கொழும்பு வீதியினை அன்மித்த குகநேசபுரம் மற்றும் ஆலங்குளம் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்தோர் சிலர் கடந்த ஒருமாத காலமாக கடை தொகுதி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகரை பிரதேச செயலகத்தின் அனுமதி பெற்றே இவ் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக கூறுகின்றனர். இது வரைக்கும் 22 பேர்கள் தற்காலிக கடை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஒரு கடையானது நேற்று இரவு இனந் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருகில் வசிக்கும் நபர் தமக்கு வழங்கப்பட்ட காணியின் அளவினை விட மேலதிகமாக காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குறித்த நபரே இவ் கடை எரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக வாகரை பிரதேச செயலக பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரத்தினை வினவியபோது எதிர்வரும் திங்கள் கிழமையன்று பிணக்கில் ஈடுபட்ட இரு சாராரையும் அழைத்து குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கருத்து தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews