கேவில் பிறீமியர் லீக் இறுதி போட்டியில் சிவஞானம் சிறீதரன் பங்கேற்பு

வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளி நிலா விளையாட்டுக் கழகம் நடாத்திய KPL-season 5 இன் இறுதியாட்டம் நேற்று 21.06.2024 மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது.

வெள்ளி நிலா விளையாட்டுக் கழக தலைவர் ந.உகனேந்திரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.

விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் 2024ம் ஆண்டுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வெள்ளி நிலா விளையாட்டு கழகத்திற்கு புதிதாக அமைத்து கொடுக்கப்பட்ட விளையாட்டரங்கு நாடாவெட்டி திறக்கப்பட்டு
நாணய சுழற்சியோடு இறுதி போட்டியை சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

இறுதி போட்டியில் கேவில் வொரியஸ் அணியை எதிர்த்து கேவில் சூப்பர் கிங்ஸ் மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய வொரியஸ் அணி பன்னிரெண்டு பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றது

134 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கேவில் சுப்பர்கிங்ஸ் அணியினர் பன்னிரெண்டு பந்துமரிமாற்றங்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது

KPL சீசன் ஐந்தின் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்ற கேவில் வொரியஸ் அணியினருக்கு வெற்றிக் கிண்ணமும் இருபதாயிரம் ரூபாய் பணப் பரிசும் வளங்கப்பட்டது.

இறுதியாக கேவில் பிரதேசத்தில் நான்கு வருடங்களாக கடமையாற்றிய முன்னாள் பொருளாதார உத்தியோகத்தர் கெளரவிக்கப்பட்டதுடன் வீரர்களுக்கான வெற்றிக் கேடயங்களும் வளங்கி கெளரவிக்கப்பட்டது

குறித்த இறுதி போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,கேவில் கிராம அலுவலர்,முள்ளியான் பொருளாதார உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews