வத்திராயனில் பரபரப்பு-நபர் ஒருவர் தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி…!(வீடியோ)

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று 20.06.2024 இரவு எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மருதங்கேணியை சேர்ந்த பவானி(43) என்பவர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார்.
நேற்று இரவு பத்து மணிக்கு எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்
விபத்திற்கான காரணம் தெரியவராத போதும் முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர

Recommended For You

About the Author: Editor Elukainews