ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அழிப்பு…!

பாடசாலை வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நேற்று முன் தினம் 13/06/2024 அகற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லுரியில் இருந்த குளவிக்கூடு நேற்றை,உ முன் தினம் கலைந்ததில் 35 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்.
இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், கற்றல் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டு பாதுகாப்புக்காக வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அகற்றப்பட்டது.

இதனை அடுத்து தருமபுரம் மத்திய கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நேரத்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்லுரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews