மட்டக்களப்பு சந்திவெளி இராசையா இலவச கல்வி நிலையத்தில் ஆங்கில பேச்சு பயிற்சியில் சாதனை பெற்ற 13 மாணவர்களுக்கு மடிகளணி; சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு..!

மட்டக்களப்பு சந்திவெளி இராசையா இலவச கல்வி நிலையம் 100 மாணவர்களுக்கு இலவசமாக நடாத்திய  6 மாதகால ஆங்கில பேச்சு பயிற்சியில் சாதனை படைத்த 13 மாணவர்களுக்கு மடிகளணி மற்றும் பரிசுப் பொருள்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (8) சந்திவெளி நித்தி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.

இராசையா இலவச கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அதிதிகளாக இலவச கல்வி ஸ்தாபகர் அகிலன் என்றழைக்கப்படும் இராசையா அகிலேஸ்வரன், திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி, ஓய்வு பெற்ற ஆசிரியர் சின்னத்தம்பி குழந்தைவேல், ஓய்வு பெற்ற அதிபர் மயில்வாகனம் சிவசுந்தரம்,

சந்திவெளி அம்மன் ஆலைய பிரதம குரு ஜங்கரன் குருக்கள், இலவச கல்வி நிலைய ஆங்கில ஆசிரியர் ஞானபிரகாசம் உதயராஜ்;;, வர்த்தகர்களான சுதா, ஆனந்தன்,  மற்றும் ஆலைய நிர்வாகிகள், ஆகியோர்  கலந்து கொண்டுடனர்.

இதில் கல்வி நிலைய ஸ்தாபகர் அகிலன் தனது சொந்த நிதியின் மூலம்  6 மாதகால ஆங்கில பேச்சு பயிற்சியை பூர்த்தி செய்து அதன் பரீட்சையில் சாதனை படைத்த முதலாம் இடத்தை பெற்ற மாணவிக்கு மடிகணணியும். இரண்டாம் மூன்றாம்  இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஸ்மாட் போன், ஏனைய மாணவவர்களுக்கு பெறுமதியான பொருட்களையும் சான்றிதழ்களையும்  வழங்கி கௌரவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews