தொலைபேசிக்கு அடிமையாகியுள்ள இலங்கைச் சிறுவர்கள்

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை மாணவர்களிடம் வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வை மேற்கொண்டதாக விசேட வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதில் பல சிறுவர்கள் இரவு நேரத்தில் தூக்கமின்றி எப்போதும் கவலையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிறுவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையை சரியான முறையில் முன்னெடுப்பதில்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார்.

மேலும், கையடக்க தொலைபேசிளுக்கு அடிமையான சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களின் உடல் சரியாக செயல்படாததால் நீரிழிவு நோய் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வதாகவும், பெற்றோர்களால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவசியமாக இருந்தால் மட்டும் எந்தவொரு சிறுவர்களையும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் மருத்துவர்கள் கேட்டுக்கொள்ண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews