3 வயது, 2 வயது குழந்தைகள் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

3 வயது மற்றும் 2 வயது குழந்தைகள் இருவர் உட்பட வடமாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்  நேற்று 151 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியா மாவட்டத்தில் 3 வயதான ஆண் குழந்தை உட்பட 8 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் 2 வயதும் 10 மாதங்களுமான பெண் குழந்தை உட்பட 7 பேருக்கும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேருக்கும், மன்னார் வைத்தியசாலையில் 6 பேருக்கும், கிளிநொச்சியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews