இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று(15) விஜயம் செய்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று(15) விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மானிப்பாயில் அமைந்துள்ள கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அமெரிக்கத் தூதுவர்  இன்று மாலை விஜயம்  மேற்கொண்டிருந்தார்.

இதன்போது வைத்தியசாலை செயற்பாடுகளை பார்வையிட்ட அமெரிக்கத் தூதுவர், வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அமெரிக்கத் தூதுவரின் விஜயத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றும் வைத்தியசாலை வளாகத்தில் இதன்போது  நாட்டப்பட்டது.

இவ் விஜயத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி எஸ்.சுரேந்திரகுமாரன், தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் வி.பத்மதயாளன், வைத்தியர்கள், ஊழியர்கள் அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews