காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வானது பல்வேறு அடக்குமுறைகளுக்கும் மத்தியில் தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண நகர பழக்கடைக்கு முன்னால் உள்ள வைரவர் கோவிலடியில் நடைபெற்றது.

இதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் யாழ்ப்பாண மாவட்ட சங்கத்தின் தலைவி திருமதி இளங்கோதை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் கலந்துகொண்டு கஞ்சியை சமைத்து அங்குள்ளவர்களுக்கு வழங்கினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews