தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு..!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த வேதன அதிகரிப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானியை  தொழில் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக குறைந்தபட்ச நாளாந்த வேதனம் 1,350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவாக 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களுக்கான நாளாந்த மொத்த கொடுப்பனவு 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிக தேயிலை கிலோவொன்றுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews