இலங்கையருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட  இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

56 வயதான ஜெராட் சிசில் வாமதேவன் என்ற இலங்கையருக்கே அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த தண்டனை வழங்கியுள்ளது.

இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி என பொய்யான தகவல்களை தெரிவித்து பலரை ஏமாற்றியுள்ளார்.

2018 முதல் 2022 ஜனவரி 22ம் திகதி வரை இவர் 18 பெண்களுடன் தொடர்பு கொண்டு தகாத முறையில் உரையாடியதாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

தன்னை சனல் 7 தொலைக்காட்சியின் திறமையாளிகளை தேடும் நபர் என அடையாளப்படுத்திய நிலையில், பெண் ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார்.

தாய் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்த நபர் மகளை துஷ்பிரயோகம் செய்து துண்டுதுண்டாக வெட்டிக்கொள்வேன் என அச்சுறுத்தியுள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட வாமதேவன் இழிவான மோசமான தகாத ரீதியிலான உரையாடலில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஒருவர், வாமதேவன் தன்னை தொலைபேசியில் அழைக்க தொடங்கியதும் பொலிஸாரை தொடர்புகொண்டுள்ளார்.

பாடகியாக வர விரும்பும் தனது மகளிற்காக தான் தயாரித்த சுயவிபரக் கோவையிலுள்ள  தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி வாமதேவன் தன்னை தொடர்புகொண்டார் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

2020 செப்டம்பர் முதல் 2021 ஜனவரி வரை வாமதேவன் அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகாத உரையாடல்களில் ஈடுபட்டார் தன்னை யார் என்பதை தெரிவிக்கவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews