இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்திவதற்க்கு தமிழ் பொது  அமைப்பு பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் தீர்மானம்…!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர்
குறித்த சிவில் சமூக குழுவின் முழுமையான தீர்மானம் வருமாறு

ஜனாதிபதித் தேர்தலில் ஒருபொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம்

தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் 30/௦4/2024 அன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர்.

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.

4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில் பின்வரும் அமைப்புக்கள், மத தலைவர்கள்  ஒப்பமிட்டுள்ளனர்.

வணக்கத்துக்குரிய ஆயர், திருகோணமலை மறைமாவட்டம்
தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கைலை ஆதீனம்
தவத்திரு வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம்
பேராசிரியர் கே ரி கணேசலிங்கம் தலைவர் அரசறிவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்
கலாநிதி. க. சிதம்பரநாதன், அரங்க செயற்பாட்டு குழு
அருட்பணி த ஜீவராஜ் ஏசு சபை சமூக செயற்பாட்டாளர் மட்டக்களப்பு
திரு நிலாந்தன் அரசியல் ஆய்வாளர்
அருட்பணி பி ஞானராஜ் (நேரு) மனித உரிமை செயற்பாட்டாளர் மன்னார்
நீதி சமாதான ஆணைக்குழு யாழ் மறை மாவட்டம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம்
தமிழ் சிவில் சமூக அமையம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம்
அறிவார் சமூகம் திருகோணமலை
அகில இலங்கை மீனவர் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கூட்டமைப்பு
கரைச்சி வடக்கு சமாசம்
சமூக விஞ்ஞான ஆய்வு மையம்
சிவில் அமைப்பு மட்டக்களப்பு
தமிழ் ஊடகத் திரட்டு
கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
மாவட்ட கமக்காரர் அமைப்பு வவுனியா
தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்
தமிழர் கலை பண்பாட்டு மையம்
எம்பவர் நிறுவனம்
மக்கள் மனு வடக்கு கிழக்கு சிவில் சமூக குழு
குரலற்றவர்களின் குரல்
மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் அமைப்பு
சமூக மாற்றத்துக்கான அமைப்பு வவுனியா
தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் திருகோணமலை
புழுதி சமூக உரிமைகளுக்கான அமைப்பு திருகோணமலை
நலிவுற்ற சமூகங்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு திருகோணமலை

குறித்த ஒன்று கூடல் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலமையில் காலை 11:10 மணியளவில் வவுனியாவில் புகையிரத வீதியில் அமைந்துள்ள RH விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக ஆய்வாளர் நிலாந்தன் அவர்களது அறிமுக உரையை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு உரையடல் இடம் பெற்றது.

இதில் உரையாடலை அகத்தியர் அடிகளார், திருகோணமலை வண ஆயர் நொயல் இமானுவேல்  வேலன் சுவாமிகள் உட்பட 48  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வணக்கத்திற்க்கு உரிய மத தலைவர்கள் என கலந்து  கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews