யாழில் போராட்டத்தில் குதித்த வேலையில்லா பட்டதாரிகள்…!

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில்  இன்று(29)  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே , வேண்டும் வேண்டும் வேலை வேண்டும் , நாசம் நாசம் கனவுகள் நாசம் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருத்தனர்.

மேலும், பலவருட கனவு வெறும் கனவாகவே போய் விடுமா, எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக வேலையில்லாமல் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டி தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அதே போன்று இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளுக்கும் அந்த மகஜரின் பிரதிகளை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews