சர்வதேச கண்ணிவெடி தினம் ஏப்ரல் 04 தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நிகழ்வு

சர்வதேச கண்ணிவெடி தினம் ஏப்ரல் 04 தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்குட்பட்ட கிளி/மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (06)காலை 10மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் ஏற்பாட்டில் சர்வதேச கன்னிவெடி தினம் நிகழ்வு நடாத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிசன்ன ரணதூங்க மற்றும் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, வடக்கு மாகாண ஆளுனர் PHM சார்ள்ஸ், பதில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றம்  நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் காட்சி படுத்தியிருந்த வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு கவசங்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டதோடு, கண்ணிவெடி அகற்றும் செயன்முறையும் அங்கே காண்பிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews