266 மில்லியன் அமொிக்க டெலர் செலவில் குடிநீர் திட்டம்! இன்று அங்குரர்ப்பணம், பிரதமர் நிகழ்நிலையில்..

யாழ்.மாவட்டத்தில் வாழும் 3 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சுமார் 266 மில்லியன் அமொிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. 

சுபீட்சத்தின் நோக்குக் கொள்கை திட்டத்தின் கீழ் சுமார் 3 இலட்சத்திற்கு அதிகமான யாழ்.மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்ற எதிர்பார்ப்பில் இத்திட்டமானது ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுமார் 24 ஆயிரம் கன லீட்டர் கடல்நீரை நன்னீராக்கும் தாளையடி குடிநீர் திட்டத்தின் கீழ் 184 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி சுமார் 822 கிலோ மீற்றருக்கு புதிய குழாய்கள் அமைக்கப்படவுள்ளது.

அதுமட்டுமல்லாது தீவக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்படவுள்ளது.

குறித்த திட்டத்துக்காக 187. 47 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் 6 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த ஐயாயிரத்துக்கு அதிகமான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யாழ்.மாநகர சபைக்கு உடபட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான அங்குரார்ப்பண வைபவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .நிகழ்வுகள் யாவும் நயினாதீவு புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்

காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பிரதமர் நிகழ்நிலையில் கலந்துகொள்ளவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews