இலங்கையின் கல்வி அமைச்சின் இணையத்தளம் அடையாளம் தெரியாத ஹேக்கரால் ஹேக்

இலங்கையின் கல்வி அமைச்சின் இணையத்தளம் அடையாளம் தெரியாத ஹேக்கரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

“அநாமதேய EEE” என்ற பெயரால் ஊடுருவிய மர்ம் நபர், கணினியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி, அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.

அதில் “என் பெயர் அநாமதேய EEE மற்றும் நான் தற்போது A/l படித்து வருகிறேன். உங்கள் இணையத்தளத்தை அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிக்கவும் ஆனால் உங்கள் இணையத்தளத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. ஒரு இலங்கை பிரஜை என்ற வகையில் எனது நாட்டின் பாதுகாப்பிற்காக இதை நான் தெரிவிக்கிறேன். அதை சரிசெய்யவும். நன்றி” என்று கல்வி அமைச்சின் இணையதளத்தில் ஹேக்கரால் காட்டப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews