தாய்வானில் சக்திவாய்த நிலநடுக்கம்; பலர் மாயம்..!

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து தாய்வானின் மத்திய வானிலை நிர்வாகம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வடக்கு கடலோர பகுதியில் சுனாமி அலைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மியாகோஜிமா மற்றும் ஒகினாவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

3 மீற்றர் உயரத்திற்கு அலைகள் எழும்பும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews