500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை

500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்  சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர், நான்கு குற்றச்சாட்டுக்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நீதிபதி பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 500 ரூபாய் இலஞ்சத் தொகையையும் குறித்த குற்றவாளியிடம் இருந்து வசூலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews