எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை  உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு உருவாகலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபாய் விசேட வர்த்தக வரியும் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 1 ரூபாயாகக்  குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பமாகிய உயர் பருவ நெல் அறுவடை, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

எனினும் பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் 90 தொடக்கம் 100 ரூபாய் வரையிலேயே ஒரு கிலோ நெல்லை கொள்வனவு செய்வதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கம் ஒரு கிலோ நெல்லுக்கு 135 ரூபாவாக விலை நிர்ணயம் செய்த போதிலும், விற்பனை செய்வதற்கு கையிருப்பில் நெல் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அரிசியை பதுக்கி வைத்து எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்த சதி முயற்சிகள் இடம்பெறுவதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews