செயற்றிட்டங்களின் வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பயனாளிகளும் அதிக அக்கறையும் செலுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் ஒவ்வொன்றினம் முழுமையான வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் அதிக கரிசனையும் அக்கறையும் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவ்வாறான ஒரு நிலை உருவாக்கப்படும் போதுதான் வழங்கப்படும் திட்டங்கள் அல்லது அபிவிருத்திகள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்கும் முழுமையான இலக்கை அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27-03-2024 புதன்கிழமை யாழ் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பல்வேறுபட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றது.
நீண்டகாலமாக இராணுவத்தினரது தேவைக்காக பயன்படுத்தப்பட்டுவந்த குறித்த காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் அக்காணிகளை உரியவர்கள் இன்னமும் முழுமையாக பொறுப்பெடுக்காத நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக பற்றைகளால் சூழ்ந்துள்ள காணிகளை துப்புரவு செய்து காணிகளின் உரிமையாளர்கள் காணிகளை வரையறை செய்து எல்லையிட்டு பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கால அவகாசம் தேவையாக உள்ளது. இதனால் குறித்த காணிகளை உரித்தாளர்கள் இன்னமுதமும் பொறுப்பெடுக்காத நிலை காணப்படுகின்றது.
இதனால் குறித்த காணிகள் மோசடிகளுக்குள்ளாகும் நிலை உருவாகலாம்.
எனவே அக்காணிகளின் உரித்தாளர்கள் தமது காணிகளை உரியவகையில் எல்லையிட்டு பொறுப்பெடுக்ககும்வரை அக்காணிகளின் பாதுகாபை பொலிசாரும் படையினரும் பாதுகாத்துக்கொடுப்பது அவசியமாறும்.
அதுமட்டுமல்லாது அக்காலப்பகுதிவரை காணிகளின் பாதுகாப்பை உறுத்திப்படுத்திக் கொடுப்படு பாதுகாப்பு படையினருக்கும் பொலிசாரும் உள்ளது. எனவே காணிகளின் உரிதாளர்கள் அதை பாரமெடுக்கும்வரை பொலிசாரும் இராணுவத்தினரும் அக்காணிகளுக்கு பாதகாப்பை வழங்கவெண்டும் எனவும் பணித்திருந்தார்.
முன்பதாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27-03-2024 புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமான குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும், ஏற்கனவே முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் யாழ் -கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினகளான சிவஞானம் சிறீதரன் செ.கஜேந்திரன், அங்கஜன் இராமநாதன் மற்றும்  வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ். இளங்கோவன்  வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,  என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews