டிப்போ ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை…

70 டிப்போ ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதாவது, 107 இ.போ.ச டிப்போக்களில் 70 டிப்போக்களின் ஊழியர்களுக்குப் பல மாதங்களாக மாதாந்த சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

திறை சேரி மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் , இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துநர்களுக்கு 8 மாதங்களுக்கு மேலாகியும் சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை.

இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெறும் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஊழல் முறைகேடுகளினால் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews