மஹிந்த இனியும் அரசியல் விளையாட்டை விளையாடாமல் ஓய்வு பெற வேண்டும்..! சம்பிக்க

மஹிந்த ராஜபக்ஷ இனியும் அரசியல் விளையாட்டை விளையாடாமல் ஓய்வு பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

அதிகார பேராசை கொண்டவர்களின் மோசடியான செயற்பாடுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அப்பாவி உறுப்பினர்களை மீண்டும் சங்கடத்திற்கு உள்ளாக்கும்.

அண்மையில் ஐக்கிய குடியரசு முன்னணியின் கம்பஹா மாவட்ட மகா தொகுதி குடியரசுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்

மேலும் ஐந்து ராஜபக்சக்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு தேர்தலை நடத்துவதா? அல்லது கடனை மறுசீரமைத்து நாட்டை ஸ்திரப்படுத்துவதா? என்பதை இந்த தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்க வேண்டும்.

பணத்தை ஏமாற்றி ஆலயங்களுக்குச் செல்வதையும் புத்தரின் கட்டளையை விற்று உண்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் இங்கு வலியுறுத்தினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews