போதைப்பொருளுடன் பிரபல வர்த்தகர் சிக்கினார்..!!

கொழும்பில்  சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருளை கொண்டு சென்ற போது முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடை – பேஸ்லைன் வீதியின் சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், ஒருகொடவத்தை ‘சப்பா’ என தெரியவந்துள்ளது.

மற்றைய சந்தேகநபரான முச்சக்கர வண்டியின் சாரதி பொரளை – சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

பிரதான சந்தேக நபரிடம் இருந்து 1580 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews