திருநெல்வேலி கொமர்சல் வங்கியில் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை….!

மகளிர் தினத்தினை கொண்டாடும் முகமாக கொமர்சல் வங்கியின்   “அனகி” செயற்றிட்டத்திற்கு அமைய நேற்றைய தினம் 18/03/2024  பெண்களுக்கான இலவசமாக மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது.
திருநெல்வேலி கொமர்சல் வங்கி முகாமையாளரின் நெறிப்படுத்தலில் ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இலவச மருத்துவ பரிசோதனையின்போது குருதி அமுக்கம், உடற்றிணிவு சுட்டெண் அளவு,  இரத்தப் பரிசோதனை என்பன மேற்கொள்ளப்பட்டன.
வங்கி கிளை மற்றும் ஏ.ரி.எம் சேவையினை பெறுவதற்கு  வருகை தந்த வாடிக்கையாளர்கள் இந்த இலவச பரிசோதனையினால் நன்மையடைந்தனர். இதற்கு டேடன்ஸ் மருத்து பரிசோதனை நிலையமும் அனுசரணை வழங்கியிருந்தது. இதில் சுமார் 127 பேர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews