சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதம் இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பிரேரணையை இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றும், நாளையும் இதற்கான விவாதம் நடைபெறவுள்ளது.
அத்துடன், நாளை மாலை 4.30க்கு சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 44 எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அண்மையில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை புறக்கணித்து, ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற, சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளன.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை பக்கச்சார்பற்ற முறையில் பாதுகாக்க வேண்டிய சபாநாயகர், அந்த பதவிக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews