கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் பரிதாப மரணம்…!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் நேற்றையதினம்(17) மாலை, வீட்டின் கிணற்றுக்கு அருகில் இருந்த மோட்டரின் குழாய் கழன்றமையால் அதனை சரிப்படுத்த முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது குறித்த இளம்பெண் கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன்  யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற இளம் பெண்ணே  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Recommended For You

About the Author: Editor Elukainews