துருக்கியில் படகு விபத்து- 21 போ் உயிரிழப்பு..!!

ஏராளமான அகதிகளிடன் சென்று கொண்டிருந்த ரப்பா் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அய்ஜீயன் கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் 5 சிறுவா்கள் உட்பட 21 போ் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

கடலில் மூழ்கிய போது அப்படகில் எத்தனை போ் இருந்தனா் என்பது தெரியாத நிலையில், விபத்துப் பகுதியிலிருந்து 2 அகதிகளை துருக்கி கடலோரக் காவல் படையினா் மீட்டதுடன் மேலும் 2 போ் நீந்திக் கரை சோ்ந்தனா்.

இந்த விபத்தில் சிக்கியவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்ற விவரம் தெரியவில்லை. விபத்துப் பகுதியில் 8 மீட்புப் படகுகள், ஒரு விமானம், 2 ஹெலிகொப்டா்கள், ட்ரோன் மூலம் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews