2 அடி நீள பல்லி கடித்ததில் ஒருவர் பலி

2 அடி வளர்ப்பு பல்லி கடித்ததில் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் வார்டு (52) என்பவர் 2 கிலா மான்ஸ்டர்ஸ் வகை பல்லிகளை வளர்த்து வந்திருக்கிறார்.

அந்த பல்லிகளில் ஒன்று கடந்த பிப்ரவரி மாதம்  உரிமையாளரை  4 நிமிடங்கள் வரை கடித்துள்ளது.  உடனேயே அவருக்கு அறிகுறிகள் தென்பட தொடங்கின. தொடர்ந்து பல முறை வாந்தி எடுத்திருக்கிறார். சுவாசமும் நின்றுள்ளது.

அவர் 2 மணிநேரம் வரை சுயநினைவற்று போயிருக்கிறார். உடனடியாக அவருடைய காதலி அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த பல்லிகள் விஷத்தன்மை வாய்ந்த ஊர்வன வகையை சேர்ந்தவை. இவற்றின் கடியானது, வலியை அதிகரிக்க செய்ய கூடியவை. ஆனால், கொல்ல கூடிய அளவுக்கு ஆபத்தில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews