காட்டு யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்..!

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டையில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று அதிகாலை  உயிரிழந்துள்ளார்.

32   வயதுடைய  நாகராசா முரளிதரன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வழக்கம் போல் மீன் பிடி தொழிலுக்கு சென்றவர் குளத்தில் மீன் பிடிப்பதற்காக கட்டு வலையினை கட்டிவிட்டு குளத்துக் கட்டில் உறங்கி கொண்டிருந்த வேளை அங்கு வந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது.

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறிவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக திடீர் மரண விசாரணை அதிகாரி கி.பவளகேசன் மரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews