தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தல் நடவடிக்கை

தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பார்சலுக்கான கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை தபால் மூலம் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியாக கிரெடிட் கார்டு தகவல்களை திருடுவதற்காக பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பப்படுவது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற குறுந்தகவல்களுக்கு தங்களது ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தபால் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், SL POST, Sri Lanka Post போன்றவற்றின் பெயர்களைப் பயன்படுத்தியும் இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தியும் இந்த மோசடி மேற்கொள்ளப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews