தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக கொழும்பு துறைமுக நகரம்!

கொழும்பு துறைமுக நகரம் தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக திகழும் என்பதில் ஐயமில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அண்மைக்காலத்தில் நாட்டில் மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த அபிவிருத்தித் திட்டத்தின் வருகையை குறிக்கும் மிக முக்கியமான நிகழ்வாக இது கருதப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வரலாற்று மையமாக இலங்கை விளங்கி வருகின்றது.

இந்த நிலையில் கொழும்பு துறைமுக நகரம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நிலப்பரப்பை மீள்வரையறை செய்வதை நோக்கமாக கொண்ட பல பில்லியன் டொலர் பெறுமதிவாய்ந்த தொலைநோக்கு திட்டமாகும்.

வர்த்தகத் துறைகளுக்கு புத்தாக்கங்களை உருவாக்குவதற்கான சிறந்த சூழலையும் நாங்கள் வழங்குகிறோம். பிராந்தியத்தில் ஒரு முக்கிய பொருளாதார மையமாக இது மாற உள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் நிச்சயமாக அந்த செயன்முறையை துரிதப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

‘தெற்காசியாவுக்கான நுழைவாயில்’ மற்றும் கிழக்கு, மேற்குக்கான மத்திய மையமாக திகழும் என்பதில் ஐயமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews