மக்களுக்கு சிறப்பு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

071 – 8598800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது ops.narcotics@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக பொது மக்கள் விசேட நடவடிக்கை பிரிவுக்கு தகவல் வழங்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவசர சேவை இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டவர்களின் அடையாளங்களை கண்டுபிடிக்க முடியாது என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews