கிளிநொச்சியில் படைத்தரப்பு வசமிருந்த காணிகள் விடுவிப்பு…!

கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகள் அதுசார்ந்த திணைக்களங்கள் மற்றும் மக்களுக்கு கையளிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.முரளீதரன் தெரிவித்தார்.

தொடர்ந்து இராணுவத்தினர் விடுவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரச காணியையும் மேலதிக மாவட்ட செயலாளர் பார்வையிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  3 பிரதேச செயலக பிரிவுகளில் 40.9 ஏக்கர் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த காணிகளை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அல்லது பொதுமக்கள் உறுதிப்படுத்தி பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு தமக்குரிய காணிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மேலதிக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews