இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம் – மனநலம் கடுமையாக பாதிப்படையும் அபாயம்..!

வெப்பமான காலநிலை காரணமாக மனநலமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நாட்களில் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மனநல கற்கைகள் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலை மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews