
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
* ௐ
*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*தாயே
போற்றி
*
*❀••┈┈•
•┈┈••❀
*
*_꧁. மாசி: 25.
꧂_*
*_ வெள்ளிக்கிழமை_
*
*_ 08 – 03 – 2024
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். எதையும் சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.
பரணி : தெளிவு பிறக்கும்.
கிருத்திகை : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் ராசி:
_*
வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் புரிதல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.
கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
ரோகிணி : புரிதல் ஏற்படும்.
மிருகசீரிஷம் : தடைகளை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம் -ராசி:
_*
மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : அனுபவம் உண்டாகும்.
புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் -ராசி:
_*
வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கலைத்துறையில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வழக்குகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்.
புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
பூசம் : குழப்பம் விலகும்.
ஆயில்யம் : தாமதங்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் -ராசி:
_*
உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதியில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
மகம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி -ராசி:
_*
காப்பீடு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் சேமிப்பு குறையும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாக பிரிவினைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
அஸ்தம் : சேமிப்பு குறையும்.
சித்திரை : நெருக்கடிகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் -ராசி:
_*
கூட்டாளிகளின் வழியில் ஆதரவு ஏற்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
சித்திரை : ஆதரவு ஏற்படும்.
சுவாதி : மதிப்பு கிடைக்கும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம்- ராசி:
_*
உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு தூரப் பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் ஆதாயம் மேம்படும். உதவி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
விசாகம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
அனுஷம் : நம்பிக்கை பிறக்கும்.
கேட்டை : ஆதாயம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு -ராசி:
_*
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். புதுவிதமான வியூகங்களை அறிவீர்கள். துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.
மூலம் : மாற்றம் ஏற்படும்.
பூராடம் : தனவரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : வியூகங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் -ராசி:
_*
உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கல்வியில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கால்நடை வளர்ப்பு பற்றிய புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். பயனற்ற வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : ஆலோசனை கிடைக்கும்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் -ராசி.
_*
உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : அனுபவமான நாள்.
பூரட்டாதி : வாய்ப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் -ராசி:
_*
குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். நிதானமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு உண்டாகும். இறை வழிபாடு சார்ந்த பயணங்கள் கைகூடும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
பூரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பயணங்கள் கைகூடும்.
ரேவதி : மேன்மை ஏற்படும்.
*┈┉┅━•• ••━┅┉┈*