யாழ்.சுழிபுரத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை…!

யாழ் வலி மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் சவுக்கடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம்(08) காலை 10.30 மணியளவில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்  தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த போராட்டத்தில்  அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு தருமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சுழிபுரம் சவுக்கடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப் பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியிருந்ததுடன்  பல்வேறு அரசியல் பிரதிநிதிகளும் குறித்த விடயம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews