*⭕வரலாற்றில் இன்று____March 07*

*⭕வரலாற்றில் இன்று____March 07*

*1900 – கம்பியில்லா சமிக்கைகளை கரைப் பகுதிக்கு அனுப்பிய முதலாவது கப்பலாக செருமனியின் கைசர் விலெம் டெர் குரொசி சாதனை படைத்தது.*

*1902 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவின் பூவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.*

*1912 – தென் முனையைத் தாம் 1911 டிசம்பர் 14 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.*

*1914 – அல்பேனியாவின் இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட அல்பேனியா வந்து சேர்ந்தார்.*

*1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து செருமனியுடன் கூட்டுச் சேர்ந்தது.*

*1936 – இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.*

*1941 – செருமனியின் யு-47 நீர்மூழ்கி அதன் மாலுமிகளுடன் காணாமல் போனது.*

*1951 – ஈரான் பிரதமர் அலி ரசுமாரா தெகுரான் பள்ளிவாசல் ஒன்றில் வைத்து இசுலாமிய அடிப்படைவாதிகளான பெதயான் இ-இசுலாம் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.*

*1951 – கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.*

*1965 – அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுமார் 600 மனித உரிமை போராளிகள் மீது மாநிலக் காவல்துறை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.*

*1968 – வியட்நாம் போர்: அமெரிக்க, தென் வியட்நாம் படைகள் மை தோ பகுதியில் இருந்து வியட்கொங் படைகளை வெளியேற்ற போர் நடவடிக்கையை ஆரம்பித்தன.*

*1971 – கிழக்குப் பாக்கித்தான் அரசியல் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் டாக்காவில் நிகழ்த்திய தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையில், “இந்த முறை போராட்டம் நமது விடுதலைக்கானது,” என அறிவித்தார்.*

*1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பிரிசர்வர் கப்பலின் சுழியோடிகள் சாலஞ்சர் விண்ணோடத்தின் பயணியர் அறையைக் கண்டுபிடித்தனர்.*

*1987 – தைவானிய இராணுவம் லியூ என்ற இடத்தி 19 வியட்நாமிய ஏதிலிகளைப் படுகொலை செய்தனர்.*

*1989 – மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது.*

*1996 – பாலத்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.*

*2006 – லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் வாரணாசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.*

*2007 – ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் அவையின் உறுப்பினர்கள் 100% தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை வாக்களித்தது.*

*2007 – இந்தோனேசியாவின் யாகியகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் உயிரிழந்தனர்.*

*2009 – வட அயர்லாந்தில் குடியரசு இராணுவப் போராளிகள் இரண்டு பிரித்தானியப் போர்வீரர்களை சுட்டுக் கொன்று, மேலும் இருவரைக் காயப்படுத்தினர்.*

Recommended For You

About the Author: Editor Elukainews