பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருளின் விலை குறைந்துள்ள போதிலும் பேருந்து  கட்டணங்கள் திருத்தப்படாது என அகில இலங்கை தனியார் பேருந்து  உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஒட்டோ டீசல் விலை குறைக்கப்படாததே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்நாட்களில் ஒட்டோ டீசலின் தரத்தில் பிரச்சினை உள்ளது. இதனைக் கொண்டு தேவையான கிலோமீட்டர் வரை வாகனத்தை செலுத்த முடியவில்லை.

இது தொடர்பாக உரியத் தரப்பினருக்கு  தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள  போதிலும்,  எரிபொருளின் தரம் குறித்து எங்களுக்கு உறுதியளிக்கப்படவில்லை.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews