வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு…!

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர்ஒருவரின் சடலம் இன்று(05)  மீட்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட கற்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டதுடன் சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால் சில தினங்களிற்கு முன்னராகவே குறித்த முதியவர் இறந்திருக்கலாம் என பொலிஸார்  சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews