இலங்கை திரும்பிய பசில் ராஜபக்ஷவுக்கு பலத்த வரவேற்பு

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை நிறைவேற்றினால் பாராளுமன்ற தேர்தலுக்கும் செல்லலாம் எதற்கும் நாங்கள் தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர் இன்று காலை விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் நான் அதை செய்கிறேன், நான் எப்போதும் டிசம்பரில் அமெரிக்கா செல்வேன்.

ஒரு வருடத்தில் சில நாட்கள் மட்டுமே நான் என் பிள்ளைகளுடன் செலவிடுகிறேன்.

கட்சிக்காக நான் கடினமாக உழைக்கிறேன். எந்தத் தேர்தல் நடந்தாலும் நான் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வேன்.

எவர் ஜனாதிபதியாக இருந்தாலும் எமது கட்சியின் ஆதரவுடன்தான் வருவார். மொட்டுக்கட்சி பலமானது. மக்களை ஒருபோதும் நாங்கள் ஏமாற்றியதில்லை.

சில இடங்களில் மக்கள் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை, நாங்கள் சொல்வதை மக்கள் ஏற்கவில்லை.  என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews