கல்வி அதிகாரிகளின் அசமந்த போக்கால் வினாத்தாள்கள் கசிவு?

மேல்மாகாண கல்வி அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாகவே, தவணைப் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியானதாக உத்தியோகத்தர்கள் ஒருவருக்கொருவரை குற்றஞ்சாட்டி வருவதாக அரச ஆசிரியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஷெஹான் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் வெளியானமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண மட்டத்திலும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானமை காரணமாக எதிர்வரும் மூன்று நாட்களில் நடைபெறவிருந்த 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான இறுதித் தவணை பரீட்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews