இன்று இந்திய தூதரகம் முன்பு இடம்பெற இருந்த ஆர்ப்பாட்டம் நாளைய தினத்திற்கு மாற்றம்

கடந்த 29.02.2024 அன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணைய கூட்டத்தின் தீர்மானத்தின் படி இன்று 04.03.2024 இந்திய தூதரகத்திற்கு முன் அண்மையில் இந்திய ராமேஸ்வர விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமறிட் அவர்கள் இலங்கை மக்களை கீழ்த்தரமாக பேசியதற்காக கண்டனம் தெரிவிக்கும் முகமாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற இருந்தது

குறித்த ஆர்ப்பாட்டமானது எமது தாயகத்தை சேர்ந்த திரு.சாந்தன் அவர்களுடைய இறுதி கிரிகை இடம்பெறுவதால் குறித்த போராட்டம் இன்று இடம்பெற இருந்த நிலையில் நாளை 05 ஆம் திகதி மாற்றப்பட்டுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மகாசபை தலைவர் இரட்ணசிங்கம் முரளி தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews